» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)

மும்பை வான்கடே மைதானத்தில் மழை இடையூறுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர்.
ரிக்கல்டன் 2 ரன்களுடன், ரோஹித் 7 ரன்களுடனுன் வெளியேறினர். வில் ஜாக்ஸ் அரை சதத்துடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சூர்யகுமார் யாதவ் 35, திலக் வர்மா 7, ஹர்திக் பாண்டியா 1, நமன் தீர் 1, கார்பின் போஷ் 27, தீபக் சஹர் 8 என 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் எடுத்தது மும்பை அணி.
இதன் பிறகு 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் அணி. எனினும் போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே வான்கடே மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் பிறகு போட்டி மீண்டும் தொடங்கியது.
பின்னர் மீண்டும் மழை விடாமல் பெய்யத் தொடங்கியதால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. 147 ரன்கல் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயம் செய்யப்பட்டது. சாய் சுதர்ஷன் 5, ஷுப்மன் கில் 43, ஜாஸ் பட்லர் 30, ரூதர்ஃபோர்ட் 28, ஷாருக்கான் 6, டிவாட்டியா 11 என 19 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அணியில் தொற்றிக் கொண்டிருக்க கூடாது: ரோஹித், கோலிக்கு பாண்டிங் அட்வைஸ்!
புதன் 22, அக்டோபர் 2025 4:25:21 PM (IST)

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் அடுத்த 3 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது
புதன் 22, அக்டோபர் 2025 12:37:34 PM (IST)

மே.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:54:13 AM (IST)

ஜெய்ஸ்வால் அபார சதம்.. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா ரன்குவிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 5:45:22 PM (IST)

இரானி கோப்பை : ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தி விதா்பா சாம்பியன்!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:41:29 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
திங்கள் 6, அக்டோபர் 2025 8:29:53 AM (IST)
