» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : விராட் கோலி அறிவிப்பு
திங்கள் 12, மே 2025 4:45:32 PM (IST)

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்தார்.
இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி. இவர் இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்தார்.
இதனிடையே இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதற்கு முன்பே ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்தார். ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவித்த சில தினங்களில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட்கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. டெஸ்ட் கிரிகெட்டில் ஓய்வை அறிவித்த விராட் கோலி பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆர்.சி.பி. மற்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான டி வில்லியர்ஸ் விராட் கோலி ஓய்வை அடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு என்ற பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஒரு அற்புதமான டெஸ்ட் கிரிக்கெட் கெரியருக்கு வாழ்த்துகள் விராட் கோலி. உங்கள் உறுதியும், திறமையும் எப்போதும் எனக்கு உத்வேகம் அளித்துள்ளன. உண்மையான ஜாம்பவான். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு..?
வியாழன் 26, ஜூன் 2025 5:36:32 PM (IST)

லீட்ஸ் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, ஜூன் 2025 8:50:17 AM (IST)

இரு இன்னிங்சிலும் சதம்... ரிஷப் பண்ட் சாதனை!
செவ்வாய் 24, ஜூன் 2025 10:09:43 AM (IST)
