» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சென்னை, பெங்களூரு மைதானங்களில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் மாற்றம்: பி.சி.சி.ஐ.
திங்கள் 9, ஜூன் 2025 5:15:03 PM (IST)
இந்திய ஆண்கள், மகளிர் மற்றும் ஏ கிரிக்கெட் அணிகள் உள்ளூரில் விளையாட உள்ள போட்டிகளுக்கான மைதான மாற்றங்களை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி (2-வது டெஸ்ட்) அக்டோபர் 10-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க இருந்தது. ஆனால் அந்த போட்டி தற்போது புதுடெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் நவம்பர் 14-ம் தேதி டெல்லியில் தொடங்க இருந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருந்தது. ஆனால் இந்த 3 போட்டிகளும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி முதல் 2 போட்டிகள் சண்டிகருக்கும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புதுடெல்லிக்கும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ராஜ்கோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:33:53 AM (IST)

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: எமிரேட்ஸ் அணியை பந்தாடிய இந்தியா!
வியாழன் 11, செப்டம்பர் 2025 10:50:35 AM (IST)

உலக குத்துச்சண்டை போட்டி: இந்தியாவின் நிகாத் ஜரீன் கால்இறுதிக்கு முன்னேற்றம்!!
புதன் 10, செப்டம்பர் 2025 11:41:08 AM (IST)

ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்: இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 11:25:02 AM (IST)

ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி உலக சாதனை!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:06:03 PM (IST)
