» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி ரேபிட் பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், பட்டம் வென்றுள்ளார்.
சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி குரோஷியாவின் ஸாக்ரெப் நகரில் நடைபெற்று வருகிறது. கிராண்ட் செஸ் டூரில் இந்த தொடரும் ஒன்றாக உள்ளது. இதன் ரேபிட் பார்மெட் முதல் சுற்று ஆட்டத்தில் குகேஷ் தோல்வியை தழுவினார். அதன் பின்னர் நடைபெற்ற 5 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 6-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தினார்.
தொடர்ந்து 7-வது சுற்றில் அனிஷ் கிரி, 8-வது சுற்றில் இவான் சரிச் உடன் விளையாடினார். அந்த இரண்டு சுற்றும் டிராவில் முடிந்தது. இதன் மூலம் ரேபிட் பிரிவில் 14 புள்ளிகளுடன் பட்டம் வென்றார் குகேஷ். ரேபிட் பிரிவில் 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார் போலந்து வீரர் துடா. 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார் கார்ல்சன். 9 புள்ளிகள் எடுத்த பிரக்ஞானந்தா 4-ம் இடத்தை பகிர்ந்து கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்று அசத்தல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 12:11:13 PM (IST)

யு19 உலகக் கோப்பையில் இந்திய அணி புதிய சாதனை அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 11:47:26 AM (IST)

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் 2026 அட்டவணை
திங்கள் 2, பிப்ரவரி 2026 11:04:12 AM (IST)

டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் : பாகிஸ்தான் அறிவிப்பு
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:49:49 AM (IST)

யூ19 உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:43:52 AM (IST)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா!
சனி 31, ஜனவரி 2026 5:51:55 PM (IST)

