» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜூனியர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு 14 பதக்கம்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 12:33:46 PM (IST)

ஜூனியர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம் உட்பட 14 பதக்கங்களை வென்றது.
தாய்லாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான 54 கி.கி., பிரிவு பைனலில் இந்தியாவின் நிஷா 4-1 என்ற கணக்கில் சீனாவின் சிருய் யாங்கை வீழ்த்தி, தங்கம் வென்றார். பெண்களுக்கான 57 கி.கி., பிரிவு பைனலில் இந்தியாவின் முஸ்கான் 3-2 என கஜகஸ்தானின் அயாசான் எர்மெக்கை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றார்.
பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் ஆர்த்தி குமாரி (75 கி.கி.,), கிருத்திகா வாசன் (80 கி.கி.,), பார்ச்சி தோகாஸ் (80+ கி.கி.,), வினி (60 கி.கி.,), நிஷா (65 கி.கி.,) வெள்ளி வென்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு 2 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என, 9 பதக்கம் கிடைத்தது.
ஆண்களுக்கான 75 கி.கி., பிரிவு பைனலில் இந்தியாவின் ராகுல் குண்டு 4-1 என, உஸ்பெகிஸ்தானின் முகமதுஜோன் யாகுப்போவெக்கை வீழ்த்தி தங்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 5 பதக்கம் கிடைத்தது. இந்திய நட்சத்திரங்கள், ஒட்டுமொத்தமாக 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என, 14 பதக்கம் வென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிஎஸ்கே-வின் ஹால் ஆஃப் பேம்: சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன் கௌரவிப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 12:21:52 PM (IST)

ஐபிஎல் 2026: தொடக்கப் போட்டிகளில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:17:37 PM (IST)

சிஎஸ்கே-வில் சஞ்சு சாம்சன்: 11-ஆம் எண் ஜெர்சியுடன் களமிறங்குகிறார்!
வியாழன் 19, மார்ச் 2026 5:17:25 PM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: பிசிசிஐ விளக்கம்!
சனி 14, மார்ச் 2026 11:10:49 AM (IST)

வாழ்த்துப் பதிவில் சஞ்சு சாம்சன் நீக்கம்: சர்ச்சையில் சிக்கிய ஷுப்மன் கில்!
சனி 14, மார்ச் 2026 10:29:35 AM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!
வெள்ளி 13, மார்ச் 2026 12:28:11 PM (IST)

