» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி
சனி 20, செப்டம்பர் 2025 8:55:45 AM (IST)

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணியில் மாநில அளவிலான மின்னொளி பெண்கள் கபடி போட்டி நடந்தது.
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி இந்திராநகரில் மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 48 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் தென்காசி வாசுதேவநல்லூர் வியாசகல்லூரி அணி முதல் பரிசையும், தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி அணி 2-வது பரிசையும், தென்காசி காலத்திமடம் இளம்புயல் அணி 3-வது பரிசும், ராமநாதபுரம் புனவாசல் ஏ.பி.எல் அம்மான் அணி 4-வது பரிசும் பெற்றனர். சிறந்த ரைடர், கேச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளரும், நகர் மன்ற உறுப்பினருமான எம்.ஆர்.வி.கவியரசன் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் விழா கமிட்டியினர் வைரமுத்து, ராஜேந்திரன், ராமச்சந்திரன், தங்கமாரிமுத்து, கனகராஜ், மனோஜ்மாரிமுத்து, ஊர்தாதலைவர் ஆறுமுகசாமி, செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர்கள் தங்கராஜ், பொன்னுசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்!
சனி 22, நவம்பர் 2025 5:02:44 PM (IST)

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அபார வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா..!
சனி 22, நவம்பர் 2025 4:31:08 PM (IST)

ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்ச்சி: 100 ஆண்டு ஆஷஸ் வரலாற்றில் முதல் முறை..!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:25:58 PM (IST)

இன்றைய வீரர்களிடத்தில் உழைப்போ, அர்ப்பணிப்போ இல்லை - பல்வீந்தர் சிங் சாடல்!
வியாழன் 20, நவம்பர் 2025 5:05:36 PM (IST)

ஐதராபாத் கேப்டனாக கம்மின்ஸ் தொடர்வார்: சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு!
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:28:13 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 93 ரன்னில் சுருண்டு படுதோல்வி!
திங்கள் 17, நவம்பர் 2025 8:54:24 AM (IST)




