» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
வியாழன் 25, செப்டம்பர் 2025 10:51:20 AM (IST)

ஆசிய கோப்பை 2025 டி-20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் நுழைந்துள்ளன. இந்த சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் துபாயில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கில் 29 ரன்கள் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஷிவம் துபே 2 ரன்னிலும், சூர்யகுமார் 5 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதேவேளை அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் அபிஷேக் 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் வந்த திலக் வர்மா 5 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் பொறுப்புடன் ஆடிய ஹர்திக் பாண்ட்யா 29 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. வங்கதேச தரப்பில் அந்த அணியின் ரிஷத் ஹசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக சைப் ஹாசன் மற்றும் டான்சித் ஹசன் தமீம் களம் கண்டனர். இதில் சைப் ஹாசன் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் டான்சித் ஹசன் தமீம் 1 ரன், பர்வேஸ் ஹொசைன் எமோன் 21 ரன், டோஹித் ஹிரிடோய் 7 ரன், ஜாக்கர் அலி 4 ரன், முகமது சைபுதீன் 4 ரன், ரிஷாத் ஹொசைன் 2 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சைப் ஹாசன் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் வங்கதேச அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 127 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐதராபாத் கேப்டனாக கம்மின்ஸ் தொடர்வார்: சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு!
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:28:13 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 93 ரன்னில் சுருண்டு படுதோல்வி!
திங்கள் 17, நவம்பர் 2025 8:54:24 AM (IST)

தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா!
சனி 15, நவம்பர் 2025 4:33:03 PM (IST)

சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சனி 15, நவம்பர் 2025 11:06:06 AM (IST)

ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல்முறை: டெல்லியை வீழ்த்தி ஜம்மு - காஷ்மீர் அணி சாதனை!
செவ்வாய் 11, நவம்பர் 2025 5:06:45 PM (IST)

தொடர்ந்து 8 சிக்சர் விளாசி மேகாலயா வீரர் உலக சாதனை: 11 பந்தில் அரைசதம் அடித்தும் அசத்தல்!
திங்கள் 10, நவம்பர் 2025 11:12:25 AM (IST)




