» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜெய்ஸ்வால் அபார சதம்.. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா ரன்குவிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 5:45:22 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் களம் கண்டனர்.
இதில் ராகுல் 38 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சாய் சுதர்சன் களம் கண்டார். சுதர்சன் - ஜெய்ஸ்வால் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் சுதர்சன் 87 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். மறுபுறம் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், சுப்மன் கில் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிகன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோனி இல்லாத சிஎஸ்கே தடுமாற்றம்: வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியில் ராஜஸ்தான் அபார வெற்றி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:41:28 AM (IST)

ஐபிஎல் 2026 தொடரில் தோனி விளையாட மாட்டார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 11:13:33 AM (IST)

ஐபிஎல் 2026: சிஎஸ்கே போட்டிகள் முழு அட்டவணை: ஏப்ரல் 23-ல் மும்பையுடன் பலப்பரீட்சை!
வெள்ளி 27, மார்ச் 2026 11:09:53 AM (IST)

சிஎஸ்கே-வின் ஹால் ஆஃப் பேம்: சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன் கௌரவிப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 12:21:52 PM (IST)

ஐபிஎல் 2026: தொடக்கப் போட்டிகளில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:17:37 PM (IST)

சிஎஸ்கே-வில் சஞ்சு சாம்சன்: 11-ஆம் எண் ஜெர்சியுடன் களமிறங்குகிறார்!
வியாழன் 19, மார்ச் 2026 5:17:25 PM (IST)

