» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா!

சனி 15, நவம்பர் 2025 4:33:03 PM (IST)



டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலம் உலக டெஸ்ட் அரங்கில் 4,000 ரன்கள், 300 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் வரிசையில் நான்காவது வீரராக ஜடேஜா இணைந்துள்ளார்.

இதற்கு முன்பாக இந்தச் சாதனையை ஐயன் போதம், கபில் தேவ், டேனியல் வெட்டோரி நிகழ்த்தியுள்ளனர். சிஎஸ்கேவில் இருந்து ராஜஸ்தானுக்குச் சென்றுள்ள ஜடேஜாவுக்கு, இரு அணியின் ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory