» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்ச்சி: 100 ஆண்டு ஆஷஸ் வரலாற்றில் முதல் முறை..!

வெள்ளி 21, நவம்பர் 2025 5:25:58 PM (IST)



100 ஆண்டு ஆஷஸ் வரலாற்றில் முதல் முறையாக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் முதல் நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது. 

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இந்நிலையில் 100 ஆண்டுகால ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் முதல் நாள் ஆட்டத்தில் (Eng 10, Aus 9) 19 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக 2001-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் (Eng 10, Aus 7) 17 விக்கெட்டுகள் இழந்தது அதிகபட்சமாக இருந்தது.

மேலும் பெர்த் மைதானத்தில் முதல் நாளில் 19 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில் 17 விக்கெட்டுகளை இழந்ததே அதிகபட்சமாக இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory