» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் நேற்றிரவு அரங்கேறியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி காக் 90 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 214 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் திலக் வர்மா 62 ரன்கள் அடிக்க, தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பார்த்மேன் 4 விக்கெட் கைப்பற்றினார். டி காக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், "டாஸ் வென்ற பிறகு பேட்டிங் தேர்வு செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் முதலில் பந்து வீசிய நாங்கள் எதையும் அதிகமாக நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் முதலில் பந்து வீசிய நாங்கள் இந்த பிட்ச்சில் லைன், லென்த் எவ்வளவு முக்கியம் என்பதைப் பின்புதான் உணர்ந்தோம். எனவே இது கற்றல் செயல்முறையாகும். நாங்கள் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
கொஞ்சம் பனியும் இருந்தது. அதனால் எங்கள் முதல் திட்டம் வேலை செய்யவில்லை. இருப்பினும் நாங்கள் 2-வது திட்டத்தை வைத்திருக்கவில்லை. ஆனால் பரவாயில்லை. நான் சொன்னதுபோல், இது ஒரு கற்றல் செயல்முறை. அவர்கள் (தென் ஆப்பிரிக்கா) எப்படி பந்துவீசினர் என்பதை பார்த்தோம். அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் அதை செயல்படுத்த முயற்சிப்போம்.
நானும் சுப்மன் கில்லும் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கலாம். ஏனெனில் எப்போதும் அபிஷேக்கை மட்டுமே நம்ப முடியாது. ஒருநாள் அவர் குறைவான ரன்களை அடிக்கக்கூடும். எனவே சுப்மன் மற்றும் சிலர் பொறுப்பேற்று ஆட வேண்டியிருந்தது. சுப்மன் முதல் பந்திலேயே அவுட் ஆனார். அதனால் நான் அந்த பொறுப்பை எடுத்து ஆழமாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஆனால் பரவாயில்லை, நாம் கற்றுக்கொள்கிறோம், அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக செய்வதற்கு முயற்சிப்போம்.
கடந்த போட்டியில், அக்சர் மிகவும் நன்றாக பேட்டிங் செய்ததை பார்த்தோம். அதனால் இன்று (நேற்று) அவரை 3-வது இடத்தில் விளையாட வைக்கலாம் என்று நினைத்தோம். துரதிஷ்டவசமாக அது வேலை செய்யவில்லை. ஆனால் அவர் நன்றாக பேட்டிங் செய்தார். அடுத்த போட்டியில் எங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்” எனு கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)

சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி சதம்: தமிழக அணி ஆறுதல் வெற்றி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:35:16 PM (IST)

ஜெய்ஸ்வால் அபார சதம் : தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:02:16 AM (IST)

ருதுராஜ், கோலி சதம் வீண் : 359 ரன்களை வெற்றிகரமாக விரட்டிய தென் ஆப்பிரிக்கா!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:47:32 AM (IST)

விஜய் ஹசாரே தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பின் விராட் கோலி.!
புதன் 3, டிசம்பர் 2025 12:46:19 PM (IST)


