» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவில் டி20 உலக கோப்பையில் விளையாட மறுப்பு: வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு!

புதன் 21, ஜனவரி 2026 4:13:18 PM (IST)

இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்து இருந்தது.

இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில் தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்றும் எச்சரித்தது.இதைத் தொடர்ந்து ஐ.சி.சி.யின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாதுகாப்பு கருதி இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசத்தின் நிலைப்பாடுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory