» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலகக் கோப்பை கால்பந்து: பிரேசிலை வீழ்த்தி நார்வே வெற்றி - முதன்முறையாகக் காலிறுதிக்குத் தகுதி!
திங்கள் 6, ஜூலை 2026 11:51:51 AM (IST)

பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில், பிரேசில் அணியை வீழ்த்தி நார்வே அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடையும் அணி தொடரை விட்டு வெளியேறும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் களம் கண்டன.
ஆட்டத்தின் பெரும்பாலான நேரத்தில் பந்தைக் குறைவாகவே தொட்டுப் பெரிதாகச் சோபிக்காமல் இருந்த நார்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட், அணியின் இக்கட்டான மிக முக்கியமான நேரத்தில் தனது அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 79-ஆவது நிமிடத்தில், இடைவேளைக்குப் பின் களமிறங்கிய ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் கச்சிதமாகப் பந்தை அசிஸ்ட் செய்ய, ஹாலண்ட் தனது தலையின் வலது பக்கத்தால் மிக நேர்த்தியாக முட்டி (Header) முதல் கோலைத் தட்டி எழுப்பினார்.
இது இந்த உலகக் கோப்பை தொடரில் ஹாலண்ட் அடித்த 6-ஆவது கோலாகும். இதன் மூலம் இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்திருந்த லியோனல் மெஸ்ஸியின் சாதனையை அவர் சமன் செய்தார். அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 90-ஆவது நிமிடத்தில் ஹாலண்ட் மீண்டும் ஒரு அதிரடி கோல் அடிக்க, நார்வே அணி 2-0 என பலமான முன்னிலையைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் கூடுதல் நேரத்தின் பிற்பகுதியில் பிரேசில் அணிக்கு ஒரு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி பிரேசில் வீரர் நெய்மர் கச்சிதமாக ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் பிரேசில் அணி 2-1 என தனது கோல் கணக்கைத் தொடங்கியது. இருப்பினும், அதன் பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரை பிரேசில் அணியால் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அபிஷேக், ஸ்ரேயாஸ் அதிரடி பேட்டிங்: இங்கிலாந்து டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து!
வியாழன் 2, ஜூலை 2026 11:55:02 AM (IST)

இந்திய ஜூனியர் அணியில் கோவில்பட்டி ஹாக்கி வீரர் தேர்வு : பெல்ஜியம் தொடரில் விளையாட வாய்ப்பு!
வியாழன் 2, ஜூலை 2026 8:50:55 AM (IST)

பெனால்டி ஷூட்-அவுட்: ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே அதிரடி வெற்றி!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:18:39 PM (IST)

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி - தொடரிலிருந்து வெளியேற்றம்!
திங்கள் 29, ஜூன் 2026 12:41:26 PM (IST)

ஒரு ரன்னில் அயர்லாந்திடம் தோல்வி: தொடரை இழந்தது இந்திய அணி!
திங்கள் 29, ஜூன் 2026 12:33:39 PM (IST)

டி20 உலக சாம்பியன் இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது அயர்லாந்து அணி!
சனி 27, ஜூன் 2026 5:27:38 PM (IST)


