» சினிமா » செய்திகள்

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் காலமானார்!

செவ்வாய் 13, ஜூன் 2023 11:21:39 AM (IST)

பிரபல நடிகர் கசான் கான் மாரடைப்பால் காலமானார்.

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் கசான் கான். 1992-ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான செந்தமிழ் பாட்டு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கசான் கான், கமல்ஹாசனின் கலைஞன், சரத்குமாரின் வேடன் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

விஜயகாந்த்தின் சேதுபதி ஐபிஎஸ், வானத்தைப் போல, வல்லரசு, நரசிம்மா, விஜய்யின் பிரியமானவளே, பத்ரி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்து மக்களிடையே பிரபலமானாவர் கசான் கான். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பில் கசான் கான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கசான் கானின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory