» சினிமா » செய்திகள்

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் நடிகை வினோதினி வைத்தியநாதன்!!

புதன் 14, ஜூன் 2023 11:55:14 AM (IST)



நடிகை வினோதினி வைத்தியநாதன் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

தமிழில் ‘எங்கேயும் எப்போதும், ‘ஓகே கண்மணி’, ‘அப்பா’, ஜிகிர்தண்டா’, ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் வினோதினி வைத்தியநாதன். கூத்துப் பட்டறையின் பல்வேறு நாடகங்களில் நடித்திருந்த வினோதினி, ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். ‘ஜிகிர்தண்டா’ படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. 

சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் ஐஸ்வர்யா ராயின் தோழியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சமீபகாலமாக ட்விட்டர் சமூக வலைதளங்களில் வினோதினி அரசியல் ரீதியான கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அவரது பல்வேறு அரசியல் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் பேசுபொருளாகின. இந்த நிலையில், நேற்று (ஜூன் 13) கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் வினோதினி. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவுடன் உறுதி செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory