» சினிமா » செய்திகள்
இந்தியன் 2 திரைப்படத்தி்ன ரன் டைம், தணிக்கைச் சான்றிதழ் விவரம்!
வெள்ளி 5, ஜூலை 2024 5:54:01 PM (IST)
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் ரன் டைம் மற்றும் தணிக்கைச் சான்றிதழ் விவரம் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.இந்தியன் - 2 படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்களின் விடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இந்தியன் -2 படத்தின் தணிக்கைச் சான்றிதழ் யு/ஏ வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் படம் 3 மணி நேரம் 4 விநாடிகள் கொண்டுள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சில வார்த்தைகள் மியூட் (ஒலி நீக்கம்), சில காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் நீக்கப்படவில்லை. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)

மனோரமா மகன் பூபதி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் மு.வீரபாண்டியன் இரங்கல்!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:14:33 PM (IST)

உணர்வுப் பூர்வமான திரைப்படம் பைசன் : படக்குழுவுக்கு அண்ணாமலை பாராட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:34:52 PM (IST)

பைசன் படம் சூப்பர்... மாரி செல்வராஜை வாழ்த்திய ரஜினி!
புதன் 22, அக்டோபர் 2025 12:49:56 PM (IST)

இந்தி நகைச்சுவை நடிகர் அஸ்ரானி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
புதன் 22, அக்டோபர் 2025 11:38:44 AM (IST)

அருணாச்சலம் படத்துக்குப் பின் இணையும் ரஜினி - சுந்தர்.சி!
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:10:49 AM (IST)

