» சினிமா » செய்திகள்
அடுத்த தளபதி நீங்களா?... சிவகார்த்திகேயன் சொன்ன பதில்!
திங்கள் 30, செப்டம்பர் 2024 11:50:55 AM (IST)
அடுத்த தளபதி நானில்லை, ஒரே தளபதி, ஒரே தல, ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார்" என்று சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேசனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
'அமரன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. சமீபத்தில் சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. சாய் பல்லவி படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில், படக்குழு புரோமோசன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. அந்தவகையில் இன்று திருச்சியில் 'அமரன்' படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சிவகார்த்திகேயன் 'தி கோட்' படத்தில் நடிகர் விஜய்யுடன் கேமியோ ரோல் ஒன்றில் நடித்தது பற்றி பகிர்ந்து கொண்டார். அந்த திரைப்படத்தில் நடித்ததற்கு பெருமைப்படுகிறேன். அதற்காக தளபதி விஜய்க்கும் வெங்கட் பிரபுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.
அதைத்தொடர்ந்து அடுத்த தளபதி நீங்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டது. அதற்கு, அதெல்லாம் கிடையாது என்றும் ஒரே தளபதி, ஒரே தல, ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர் ஸ்டார்" என்று சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு
வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)
