» சினிமா » செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!

செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)



நடிகர் ரஜினிகாந்த் ரெட்ரோ படத்தைப் பாராட்டியுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ. 90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பாராட்டியதாக கார்த்திக் சுப்புராஜ் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தலைவர் ரெட்ரோ படத்தைப் பார்த்துவிட்டார். அவருக்குப் பிடித்திருந்தது. அவர் என்னிடம் சொன்னதை அப்படியே சொல்கிறேன். ’படக்குழுவிடமிருந்து என்ன ஒரு உழைப்பு.. நடிகர் சூர்யாவின் நடிப்பு அருமை... படத்தின் இறுதி 40 நிமிடங்கள் சூப்பர்... சிரிப்புப் பகுதி அற்புதமாக இருந்தது.’ என்றார். நான் இப்போது பறந்து கொண்டிருக்கிறேன். லவ் யூ தலைவா” என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory