» சினிமா » செய்திகள்
சரியான கதை கிடைத்தால் கமலுடன் இணைந்து நடிப்பேன் : ரஜினிகாந்த் பேட்டி!
புதன் 17, செப்டம்பர் 2025 11:18:22 AM (IST)
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை. அதற்கு சரியான கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்போம் என்று ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கூறுகையில், அடுத்து ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் (தயாரிப்பு நிறுவனம்) இரண்டிற்கும் சேர்த்து ஒரு படம் பண்ண போகிறேன். இன்னும் இயக்குனர் முடிவாகவில்லை. கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை. அதற்கு சரியான கதை, கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். அது கிடைத்தால் நடிப்போம் என்றார்.ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஈடுபட்டுவருகிறார். இப்படத்தையடுத்து அவர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைய உள்ளதாகவும் அதில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஒரு விழாவில் கமல்ஹாசன் இதனை உறுதிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளையராஜா இசையில் பாடிய வேடன், அறிவு!
வெள்ளி 2, ஜனவரி 2026 12:23:18 PM (IST)

எல்லோரும் நல்லா இருப்போம்: ரசிகர்களுக்கு ஜன நாயகன் படக்குழு புத்தாண்டு வாழ்த்து!
வியாழன் 1, ஜனவரி 2026 12:09:53 PM (IST)

பருத்திவீரன் புகழ் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
புதன் 31, டிசம்பர் 2025 12:44:55 PM (IST)

2025-ல் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் துரந்தர் முதலிடம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:38:09 AM (IST)

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான்?
வியாழன் 25, டிசம்பர் 2025 5:01:21 PM (IST)

