» சினிமா » செய்திகள்

நடிப்பு பயிற்சியாளர் கே.எஸ்.நாராயணசாமி மறைவு : ரஜினிகாந்த் அஞ்சலி

செவ்வாய் 18, நவம்பர் 2025 12:47:24 PM (IST)



திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் தனக்கு நடிப்பு கற்றுக் கொடுத்த ஆசிரியர் கே.எஸ். நாராயணசாமி மறைவையொட்டி அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியின் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கோபாலி என்று அழைக்கப்பட்ட கே.எஸ். நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92.

புனேயில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் முதல் மாணவர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், பின்னர் டாக்டர் பட்டமும் பெற்றிருந்தார். இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களை உருவாக்குவதில் பங்காற்றியவர். பல இயக்குநர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராதா ரவி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி வழங்கியுள்ளார் கே. எஸ். நாராயணசாமி. இயக்குநர் கே. பாலச்சந்தர் திரைப்படப் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது அவரிடம் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியவர் இவரே. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் கே. எஸ். நாராயணசாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory