» சினிமா » செய்திகள்
திரைக்கே வராத ரீமேக் திரைப்படத்திற்கு தமிழக அரசின் 3 விருதுகள் அறிவிப்பால் சர்ச்சை!
திங்கள் 2, பிப்ரவரி 2026 12:25:51 PM (IST)
திரைக்கே வராத ரீமேக் திரைப்படத்திற்கு தமிழக அரசின் 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் தாமதித்த மாநில விருதுகளுக்கான பட்டியல் அண்மையில் வெளியானது. இதில், 2016 - 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் வெளியான திரைப்படங்களுக்கான சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த விருது அறிவிப்பு சிலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பெரும்பாலான தமிழ் படைப்பாளிகளுக்கு அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. காரணம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பல திரைப்படங்களுக்கு ஒரு விருதுகூட கிடைக்கவில்லை.
மாறாக, சில மோசமான திரைப்படங்கள் தேர்வாகியிருந்தன. இதிலும் குறிப்பாக, நடிகர்கள் விமல், ஸ்ரேயா நடிப்பில் உருவான ‘சண்டக்காரி’ என்கிற திரைப்படத்திற்கு 2020 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது சிறந்த திரைப்படம், சிறந்த பாடகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது திரைத்துறையினரிடம் அதிர்ச்சியையே உண்டாகியுள்ளது. காரணம், இந்த சண்டக்காரி திரைப்படம் மலையாளத்தில் உருவான, ‘மை பாஸ்’ என்கிற திரைப்படத்தின் ரீமேக் எனக் கூறுகின்றனர். ஒரு ரீமேக் படத்திற்கு எதற்கு மாநில விருதுகள்?
சரி, இன்னொரு அதிர்ச்சி இருக்கிறது. என்ன? சண்டக்காரி இன்னும் திரையரங்குகளில் வெளியாகவேவில்லை. எந்த ஓடிடியிலும் இல்லை. பிறகு எப்படி விருது அறிவிக்கப்பட்டது? இயக்குநர் ராம் இயக்கிய பேரன்பு திரைப்படத்திற்கு ஒரு விருதுகூட அறிவிக்கப்படவில்லை. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற சார்பட்டா பரம்பரை படத்திற்கு ஒரு விருதுகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான்: 34 ஆண்டுகால இசைப் பயணம் முடிவுக்கு வருகிறதா?
புதன் 18, மார்ச் 2026 11:20:49 AM (IST)

சர்ச்சையான நாயுடு பேச்சு: மன்னிப்பு கோரி விளக்கமளித்தார் நடிகர் பார்த்திபன்!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:10:24 PM (IST)

புடினுக்கு எதிரான ஆவணப்படத்திற்கு ஆஸ்கர்: 2026 விருது விழாவின் முக்கியத் துளிகள்!
திங்கள் 16, மார்ச் 2026 5:27:58 PM (IST)

சிறை பட வெற்றிக்குத் தமிழ் ரசிகர்களே காரணம்: இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு
சனி 14, மார்ச் 2026 11:23:29 AM (IST)

மீண்டும் தொடங்குகிறதா இந்தியன் 3? - இயக்குநர் ஷங்கரின் அதிரடி முடிவு!
புதன் 11, மார்ச் 2026 4:28:59 PM (IST)

தணிக்கையில் தொடரும் இழுபறி: ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:14:13 PM (IST)