» சினிமா » செய்திகள்

விஜய் - திரிஷா விவகாரம்: இயக்குநர் பார்த்திபனின் கருத்தால் வெடித்த புதிய சர்ச்சை!

செவ்வாய் 10, மார்ச் 2026 11:10:17 AM (IST)



நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. விஜய்யின் குடும்ப வாழ்க்கை குறித்துப் பரவி வரும் வதந்திகளுக்கு மத்தியில், இந்தச் சந்திப்பு பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இது குறித்து ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்த இயக்குநர் பார்த்திபன், "குந்தவை (திரிஷா) வீட்டிலேயே ‘குந்த’ வைத்தால் (அமர்ந்திருந்தால்) நல்லது, வெளியே வந்தால் பிரச்சினைகள் வருகிறது" என்று மறைமுகமாக விமர்சித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, "மைக்கில் பேசுவதெல்லாம் புத்திசாலித்தனமாகாது; மரியாதையற்ற வார்த்தைகள் பேசுபவரின் குணத்தையே காட்டும்" என திரிஷா சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

திரிஷாவின் பதிவிற்குப் பின் விளக்கமளித்த பார்த்திபன், "விஜய்க்கு அரசியல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே அவ்வாறு கூறினேன். திரிஷா இவ்வாறு பதிவிடுவார் என்று தெரிந்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டேன்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.

பார்த்திபன் வெளியிட்டு உள்ள வீடியோவில் கூறியதாவது: திரிஷாவை நான் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். இந்த நேரத்தில் ஒரு திரைப்பட நட்சத்திரம் என்பதை மீறி வந்திருக்கிற திரிஷாவுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

என்னதான் நாம் ஷார்ப்பா... புத்தி கூர்மையாக பேசினால் கூட மைக்கில் பேசி விட்டதால் புத்திசாலிதனம் ஆகி விடாது என்ற பழி நம் மீது இருக்கிறது. அதனால் நான்கூட முட்டாள் தனமா பேசினால் கூட புத்திசாலிதனமா டிரான்ஸ்லேட் பன்னிக்கொடுக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு. ஓகே.

ஹாய் பிரெண்ட்ஸ் நல்லா இருக்கிங்களா? தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்பவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்.

அதே மாதிரிதான் நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்பது ஒரு விதம். மன்னிப்பு கேட்கிறேன் என்பது இன்னொரு விஷயம். ஒரு நிகழ்ச்சியை தவறு நடந்து விட்டதாக உணர்கிறேன். உண்மையில் அது தவறிதான் நடந்தது.

நான் மேடையில் விஜய், அஜித்தை பற்றி பேசும்போது வேறு ஒரு புகைப்படம் வந்தது. அதை பார்த்ததும் உண்மையில் நான் திகைத்து போய் விட்டேன். ஆனால் வேண்டுமென்றே அந்த போட்டோவை நான் போட சொல்லி பேச ஆசைப்பட்டேன் என்று சொல்வது 100 சதவீதம் பொய்.

ஏனெனில் மகளிர் தினம் அன்று. நான் யாரை பற்றி பேசுவேன் என்றால் அன்னை தெரசா, வேலு நாச்சியாரை பற்றி பேச ஆசைப்படுறேன். அதை விடுத்து நான் இப்படி பேச ஆசைப்பட்டேன் என்று சொல்வது சரியில்லை.

இந்த விவகாரம் குறித்து நான் மன்னிப்பு கேட்ட பிறகு திரிஷா ஒரு டுவிட் போடுகிறார். அதில் நானே விரும்பி அந்த போட்டோவை போட சொன்னதாக குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு டுவிட் வரும் என்று தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன்.

அது ஒரு மூன்றாவது மனுஷியின் ஒரு மூன்றாம் தரமான டுவிட். சமீப காலமாக அவர் குறித்து வந்த கொச்சையான கருத்துக்கள் பொதுவெளியில் இருக்கிறது. அவை அனைத்துக்கும் அவர் பதில் சொல்லியிருந்தார் என்றால் நான் இதை வரவேற்று இருப்பேன்.

ஆனால் அது எதற்குமே பதில் சொல்லாமல் எனக்கு மட்டுமே கண்டனம் தெரிவித்த காரணத்தால் நான் வருத்தம் தெரிவித்ததே தவறு என நிறைய பேர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். வி ஸ்டாண்ட் வித் பார்த்திபன் என்று நிறைய பேர் குரூப் ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த நண்பர்களுக்கு நன்றி" இவ்வாறு பார்த்திபன் வீடியோவில் கூறியுள்ளார்.

இந்தச் சூழலில், திரிஷா தனது வளர்ப்பு நாய் குறித்த சாதாரணப் பதிவு ஒன்றை வெளியிட, அதற்குக் கீழ் விஜய் ரசிகர்கள் பலர், "உங்கள் செயலால் எங்கள் அண்ணனின் முதலமைச்சர் கனவு பாதிக்கப்படுகிறது" எனத் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory