» சினிமா » செய்திகள்

நீங்கள் தான் எங்களின் அளவுகோல்: ரஜினியின் பாராட்டுக்கு துரந்தர் 2 இயக்குநர் நெகிழ்ச்சி!

செவ்வாய் 24, மார்ச் 2026 11:20:34 AM (IST)



ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படமென பாராட்டிய ரஜினிக்கு துரந்தர் 2 படத்தின் இயக்குநர் ஆதித்யா தார் நன்றி தெரிவித்துள்ளார். 

ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனை படைத்து வருகிறது. வெளியான 4 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 761 கோடி வசூலித்துள்ளது. விரைவில் ரூ. 1000 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், தனது எக்ஸ் (X) தளத்தில், "ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம். ரன்வீர் சிங் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் ஆதித்யா தார், "சார், 'பொழுதுபோக்கு' என்றாலே அது நீங்கள்தான். உங்களைப் பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம். நீங்கள் பாராட்டுவது என் வாழ்வின் மிகப்பெரிய 'சூப்பர் ஸ்டார்' தருணம். உங்கள் ஆசீர்வாதத்திற்கு வார்த்தைகளால் சொல்ல முடியாத நன்றிகள்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory