» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வேண்டும்: தமிழக காங்கிரஸ் தீர்மானம்
திங்கள் 19, செப்டம்பர் 2022 5:25:31 PM (IST)
ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்துவருகிறார். இதற்கிடையே, நாடு முழுவதும் 150 நாள்கள் 3,600 கி.மீ. இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார். இந்த பயணத்தின் போது மக்களை நேரில் சந்தித்து குறைகளை ராகுல் கேட்டறிந்து வருகிறார்.இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வரவேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி உள்ளிட்ட மாநில கமிட்டிகளின் பொதுக்குழுவில் ராகுல் காந்திக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனநாயகன் ரிலீஸ் தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் - தணிக்கை வாரியம் அறிவிப்பு!
புதன் 18, மார்ச் 2026 5:17:30 PM (IST)

பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல அனுமதியில்லை: கட்டுப்பாடுகள் முழு விபரம்!
திங்கள் 16, மார்ச் 2026 4:13:23 PM (IST)

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்: புதிய கட்சியை அறிவித்தார் சசிகலா
வெள்ளி 13, மார்ச் 2026 4:47:08 PM (IST)

விஜய்க்கு என்று தனிப்பட்ட தத்துவமோ, கோட்பாடோ கிடையாது: சீமான் விமர்சனம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:20:15 AM (IST)

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: தேர்தல் ஆணையக் குழு ஆய்வு நிறைவு!
சனி 28, பிப்ரவரி 2026 5:16:35 PM (IST)

லட்சக்கணக்கான கோடி கடன் எங்கே போனது? தமிழக பட்ஜெட் குறித்து அண்ணாமலை கேள்வி
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:43:06 PM (IST)

