» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு - வி.கே.சசிகலா நம்பிக்கை
திங்கள் 11, செப்டம்பர் 2023 10:41:55 AM (IST)
வரும் மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமாகும் என்று வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பள்ள மொளச்சூரில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் வி.கே.சசிகலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சாமி தரிசனம் செய்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், அன்னதானமும் வழங்கினார். முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ மொளச்சூர் பெருமாள் இல்ல திருமண விழாவிலும் பங்கேற்றார்.அப்போது செய்தியாளர்களிடம் சசிகலா கூறியது: வரும் மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமாகும். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தான் திமுகவினர் தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். அரசு அதிகாரிகளுக்கு மாதம் சம்பளம் வழங்கவே அரசிடம் போதுமான நிதி இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் மகளிருக்கு மாதா மாதம் உரிமை தொகை வழங்குவது எந்த விதத்தில் சாத்தியமாகும். மேலும் தேர்தலில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 8:29:15 PM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)


ஜெ . ரசிகர்கள்Sep 12, 2023 - 03:52:08 PM | Posted IP 172.7*****