» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்:: பிரதமர் மோடி

திங்கள் 1, ஏப்ரல் 2024 8:33:16 AM (IST)

கச்சத்தீவை காங்கிரஸ்,  திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா-இலங்கை இடையிலான கச்சத்தீவு, கடந்த 1974-ம் ஆண்டுவரை இந்தியா வசம் இருந்தது. 1974-ம் ஆண்டு இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிருந்து மீன் பிடிக்க கச்சத்தீவுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு ஒப்படைப்பு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அந்த ஊடக செய்திகளை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி இரக்கமின்றி தாரை வார்த்தது என்பதை வெளிப்படுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளன. இவை ஒவ்வொரு இந்தியருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளன. ‘காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது’ என்பதை மக்கள் மனதில் மீண்டும் பதிய வைத்துள்ளது. இந்தியாவின் ஒற்றுைம, ஒருமைப்பாடு, நலன்கள் ஆகியவற்றை பலவீனப்படுத்துவதுதான் 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செயல்படும் வழி ஆகும். இன்னும் அப்படித்தான் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: கச்சத்தீவு விவகாரம் தொடர்பான கடந்த காலம் பற்றிய முழு உண்மைகளை மக்கள் அறிந்து கொள்வது முக்கியம். இந்த உண்மைகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் கவலை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சுதன்சு திரிவேதி கூறியிருப்பதாவது: மத்தியில் அப்போது இருந்த காங்கிரஸ் அரசு எடுத்த முடிவுதான், கச்சத்தீவுக்கு செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பிடிக்கப்படுவதற்கும், சிைறயில் அடைக்கப்படுவதற்கும் வழி வகுத்தது. 1974-ம் ஆண்டுவரை கச்சத்தீவு நம்மிடம்தான் இருந்தது. தமிழ்நாட்டு மீனவர்கள் அங்கு போய் வந்தனர். இந்திராகாந்தி ஆட்சிக்்காலத்தில் இலங்கையுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தால், அவர்கள் அங்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டது.

தி.மு.க.வோ, காங்கிரசோ இதுகுறித்து பிரச்சினை எழுப்பியது இல்லை. இருப்பினும், தேச பிரச்சினைகள் மீதான அர்ப்பணிப்பு உணர்வால் பிரதமர் மோடி இதில் கவனம் செலுத்துகிறார். கச்சத்தீவு பிரச்சினையில் ராகுல்காந்தி மவுனம் சாதிக்கிறார். இப்பிரச்சினையில் காங்கிரசுக்கு மட்டுமின்றி, தனது குடும்பத்துக்கும் பொறுப்பு இருப்பதை அவர் மக்களுக்கு சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory