» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கலால் கொள்கை முறைகேடு வழக்கு : திகார் சிறையில் கேஜரிவால் அடைப்பு!

திங்கள் 1, ஏப்ரல் 2024 5:49:57 PM (IST)

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் சம்மனை தொடர்ந்து நிராகரித்து நேரில் ஆஜராக மறுத்து வந்த டெல்லி முதல்வர் கேஜரிவாலின் வீட்டுக்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 21-ஆம் தேதி சோதனைக்கு பிறகு அவரை கைது செய்தனர்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.இன்றுடன் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் ஜாமீனுக்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள திகார் சிறையில் சிறை எண் 2-இல் தனியாக கேஜரிவாலை மட்டும் காவல்துறையினர் அடைத்துள்ளனர். ஏற்கெனவே கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகள் கவிதா ஆகியோரும் திகார் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறை எண் 2-இல் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் சிங் சில நாள்களுக்கு முன்னதாகதான் சிறை எண் 5-க்கு மாற்றப்பட்டார். டெல்லி முதல்வராக இன்னும் கேஜரிவால் தொடர்ந்து வரும் நிலையில், அவர் ராஜிநாமா செய்வாரா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory