» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போலி நிறுவனங்கள் மூலம் பாஜவுக்கு ₹103 கோடி நன்கொடை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

வியாழன் 11, ஏப்ரல் 2024 12:31:15 PM (IST)

பே-பிஎம் ஊழலில் புதிய தகவல் வெளியாகி இருப்பதாகவும், புதிதாக தொடங்கப்பட்ட 20 போலி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் மூலம் பாஜவுக்கு ரூ.103 கோடி நன்கொடை கொடுத்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்ட தேர்தல் பத்திரம் தொடர்பான ஆய்வு செய்தியை அடிப்படையாக வைத்து நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பே-பிஎம் ஊழலான தேர்தல் பத்திரம் முறைகேடு பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த ஊழல் 4 விதமாக நடந்திருக்கிறது. 

1. தொழில் செய்ய வேண்டுமா, நன்கொடை கொடு, 2. ஒப்பந்தம் வேணுமா, நன்கொடை கொடு, 3. ஈடி, சிபிஐ மூலம் மிரட்டி நன்கொடை வசூல், 4. போலி நிறுவனங்கள் மூலம் நன்கொடை வசூல். இவற்றில் தற்போது போலி நிறுவனங்கள் மூலம் நடந்த தேர்தல் பத்திர ஊழல் தொடர்பான புதிய சங்கதி வெளியாகி இருக்கிறது.

அதாவது, புதிதாக தொடங்கப்பட்ட 20 நிறுவனங்கள் மூலம் பாஜ ரூ.103 கோடி நன்கொடை பெற்றிருப்பதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான விதிமுறையின்படி, நிறுவனம் தொடங்கி 3 ஆண்டுகள் ஆன நிறுவனங்கள் மட்டும் நன்கொடை வழங்க முடியும். ஆனால், இந்த விதிமுறையை நேரடியாக மீறி, தொடங்கப்பட்ட 3 ஆண்டிற்குள் நிறுவனங்கள் நன்கொடை தந்துள்ளன.

மேலும், முந்தைய 3 ஆண்டில் சராசரி நிகர லாபத்தில் 7.5 சதவீதத்தை மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடையாக தர வேண்டுமென்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளது. போலி நிறுவனங்கள் மூலம் நன்கொடை தரப்படக் கூடாது என்பதற்காகவே 3 ஆண்டு அனுபவமுள்ள நிறுவனங்கள் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது. இந்த கடைசி பாதுகாப்பும், மோடியின் நேரடி பார்வையின் கீழ் மீறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறி உள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory