» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திகார் சிறைக்குள் கெஜ்ரிவாலை கொல்ல சதி : ஆம் ஆத்மி மீண்டும் குற்றச்சாட்டு

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 9:17:04 AM (IST)

திகார் சிறைக்குள் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாக ஆம் ஆத்மி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள முதல்-மந்திரி கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். திகார் சிறையில் அவரை கொல்ல சதி நடப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மற்றும் வீட்டில் தயாரித்த உணவு போன்றவற்றை வழங்க கோர்ட்டு அனுமதி அளித்தும், அவை வழங்கப்படவில்லை என டெல்லி மந்திரி அதிஷி குற்றம் சாட்டியிருந்தார்.

இதைப்போல கெஜ்ரிவால் தரப்பு மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வியும் இந்த குற்றச்சாட்டை கூறி, இது மிகவும் ஆபத்தானது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் கெஜ்ரிவால் சிறையில் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கி தள்ளப்பட்டு இருப்பதாக ஆம் ஆத்மி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளரும், மாநில சுகாதார மந்திரியுமான சவுராப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2-ம் வகை நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவால், சிறை நிர்வாகத்திடம் இன்சுலின் கேட்டு வருகிறார். மேலும் தனது குடும்ப டாக்டருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை பெற அனுமதி கோரி வருகிறார்.

ஆனால் திகார் சிறை நிர்வாகம் அதை மறுத்து வருகிறது. இதனால் கெஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து வருகிறது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மற்றும் டாக்டரின் ஆலோசனையை மறுப்பதன் மூலம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதற்கு சதி நடக்கிறது என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன்.

இந்த விவகாரத்தில் திகார் சிறை நிர்வாகம், மத்திய அரசு, பா.ஜனதா மற்றும் டெல்லி துணைநிலை கவர்னரின் செய்லபாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. கெஜ்ரிவால் கடந்த 20-22 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். சிறையில் அவர் தினமும் ரத்த சர்க்கரை அளவை அறிந்து கொள்ள மெஷின் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் கெஜ்ரிவாலின் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, 2-4 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்ததும், சிறுநீரகம், இதயம் மற்றும் பிற உறுப்புகளுக்கு சிகிச்சை வெற வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு சவுராப் பரத்வாஜ் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory