» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பா.ஜ.க.வின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார்: காங். விமர்சனம்
வியாழன் 29, மே 2025 12:52:44 PM (IST)
பா.ஜ.க.வின் சூப்பர் செய்தித்தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் மத்திய அரசு அனைத்துக்கட்சி குழு அமைத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் குழுவினர் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்து வருகின்றனர்.
இதனிடையே, பனாமாவுக்கு சசிதரூர் தலைமையிலான குழு சென்றது. அந்த குழு பனாமா அதிகாரிகளை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் எடுத்துரைத்தது. அப்போது, அங்கு செய்தியாளர்களை சந்தித்த சசிதரூர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை பாராட்டினார்.
இந்நிலையில், மோடி மற்றும் பா.ஜ.க. அரசை பாராட்டிய சசிதரூரை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான உதித் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக உதித் ராஜ் கூறுகையில், பா.ஜ.க.வின் சூப்பர் செய்தித்தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார். பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடி, பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக பேசுவதை விட சசிதரூர் அதிக ஆதரவாக பேசுகிறார்' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)
