» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தக் லைப் தடை விவகாரம்: கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு முதல்வர் சித்தராமையா ஆதரவு!
திங்கள் 2, ஜூன் 2025 4:34:43 PM (IST)

கமல்ஹாசனின் தக் லைப் திரைப்பட தடை விவகாரத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு முதல்வர் சித்தராமையா ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் மட்டும் தொடங்கவில்லை. முன்னதாக நடந்த 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து பிறந்ததே கன்னட மொழி என்று கமல்ஹாசன் பேசி இருந்த நிலையில், கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கடந்த 31-ம் தேதி "தக் லைப்" படத்திற்கு தடை விதிப்பதாக தெரிவித்தது.
இதையடுத்து தக் லைப்' படத்தை படத்தை வெளியிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் கமல்ஹாசன் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு முதல்வர் சித்தராமையா ஆதரவு தெரிவித்திருக்கிறார். சித்தராமையாவை சந்தித்து 'தக் லைப்' பட பிரச்சினை குறித்து திரைப்பட வர்த்தக சபை பேசியுள்ளது. வர்த்தக சபைக்கு சட்டரீதியாக ஆதரவு, ஒத்துழைப்பு தருவதாக கர்நாடக முதல்வர் உறுதியளித்திருக்கிறார். மேலும், கன்னட மொழி பிரச்சினையில் அனைவரும் உறுதியாக நிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)
