» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
18வது சீசனில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி : தேர்தல் ஆணையம் நூதன முறையில் வாழ்த்து!
புதன் 4, ஜூன் 2025 11:12:21 AM (IST)

ஐபிஎல் 18வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. 18 வருட காத்திருப்புக்கு பின்பு பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 18 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், 'காத்திருந்தது போதும், 18 வயதானால் வாக்காளராக பதிவு செய்யுங்கள்' என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)
