» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கமல்ஹாசன் மீது நாங்கள் மென்மையான போக்கை காட்டவில்லை : கர்நாடக துணை முதல்வர்
புதன் 4, ஜூன் 2025 12:47:26 PM (IST)
கமல்ஹாசன் மீது நாங்கள் மென்மையான போக்கை காட்டவில்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: நடிகர் கமல்ஹாசன், கன்னட மொழி குறித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மன்னிப்பு கேட்கும்படி ஐகோா்ட்டு கூறியுள்ளது. அதனால் அவர் ஐகோர்ட்டை மதித்து நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என்று நம்புகிறேன். மாநிலத்தின் நலன், மொழியின் நலன் காக்க வேண்டும்.
நமது இலக்கியவாதிகளுடன் பேசினேன். நாம் திராவிட பகுதியை சேர்ந்தவர்கள். இதில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று இல்லை. அனைத்து மொழிகளும் ஒன்றாக வந்துள்ளது. கன்னடத்தில் சில தெலுங்கு வார்த்தைகள் உள்ளன. தமிழ், மலையாளத்திலும் கன்னடம், தெலுங்கு வார்த்தைகள் கலந்துள்ளன. நம்மவர்களும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். போராட்டங்களை நடத்தியுள்ளோம். கோர்ட்டு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
கமல்ஹாசன் மீது நாங்கள் மென்மையான போக்கை காட்டவில்லை. மொழி, சாதி, மாநிலங்களுக்கு இடையே சண்டையை ஏற்படுத்த முடியுமா?. பா.ஜனதாவினர் எப்போதும் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். நாங்கள் ஒன்றுபடுத்துபவர்கள். அவர்கள் கத்திரிக்கோல், நாங்கள் ஊசி. ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு?. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)
