» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்ற பரிசீலனை : சித்தராமையா
திங்கள் 9, ஜூன் 2025 10:24:12 AM (IST)

சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதானசவுதா முன்பு பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள ஆர்.சி.பி. ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி இருந்தார்கள். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறி வருகிறார். ஆனால் அரசின் அலட்சியமே 11 பேர் சாவுக்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல் - மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இதுபோன்ற ஒரு விரும்பத்தகாத சம்பவம் எந்த அரசாங்கத்தின் கீழும் நடக்கக்கூடாது. தனிப்பட்ட முறையில், இந்த சம்பவம் என்னையும் அரசாங்கத்தையும் காயப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் ஐந்து காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறைத் தலைவரும் முதலமைச்சரின் அரசியல் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)
