» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேனிலவு சென்ற தம்பதி மாயமான வழக்கில் திடீர் திருப்பம் : கணவரை கொன்ற மனைவி கைது!
திங்கள் 9, ஜூன் 2025 12:10:45 PM (IST)

மேகலாயாவில் தேனிலவு சென்ற தம்பதி மாயமான சம்பவத்தில், கணவரை கூலிப்படை வைத்து கணவரை கொன்றதாக மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் மேகலாயாவுக்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்நிலையில், மே 23ம் தேதி முதல் இருவரையும் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனிடையே ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி , வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோனம், ராஜ் குஷ்வாஹா என்ற மற்றொரு நபருடன் தொடர்பில் இருந்ததைக் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், சோனமின் தந்தை, காவல்துறையினரின் கூற்றுகளை நிராகரித்து, மேகாலயா காவல்துறை இந்த வழக்கை ஜோடிப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருவதாகவும் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)
