» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:31:46 PM (IST)

பீகாரில், தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராகுல்காந்தி நடத்தி வரும் நடைபயணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் கடந்த 17-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 17-ந்தேதி சசாரம் நகரில் தொடங்கிய இந்த யாத்திரை 16 நாட்கள் நடைபெற்று பாட்னாவில் வருகிற 1-ந்தேதி நிறைவடைகிறது.
இந்த யாத்திரை பேரணியை 1,300 கிலோ மீட்டருக்கு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த யாத்திரையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-அமைச்சர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில், பீகாரில், ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். திறந்தவெளி வாகனத்தில் ராகுல் காந்தியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணி செல்கிறார்.
இதைபோல கனிமொழி எம்.பி. பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ராகுல் காந்தி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த பேரணி நிறைவடையும் இடத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின்னர் அவர், அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் தர்பங்கா விமான நிலையம் வருகிறார். பின்னர் சிறப்பு விமானம் மூலம் மாலை 4.30 மணியளவில் சென்னை திரும்புகிறார்.
மக்கள் கருத்து
ஓ அப்படியாAug 27, 2025 - 03:35:18 PM | Posted IP 104.2*****
பீகார் காரர்களை தமிழ் நாட்டில் ஓட்டுக்கு வரவழைப்பதா ?
srinivasanAug 27, 2025 - 03:10:04 PM | Posted IP 162.1*****
two stupids are met.nothing will happen agian in bihar NDA alliance will come all original indians support BJP
மேலும் தொடரும் செய்திகள்

பத்மநாபசாமி கோவிலில் 107 கிராம் தங்கம் மாயம் : 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை...!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:24:57 AM (IST)

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : வந்தே பாரத் ரயில்களை துவக்கி பிரதமர் மோடி பேச்சு!
சனி 8, நவம்பர் 2025 12:29:52 PM (IST)

பணமதிப்பிழப்பு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அறிவிப்பு வந்ததா? மத்திய அரசு மறுப்பு
சனி 8, நவம்பர் 2025 8:49:34 AM (IST)
தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி என்பதை எடுத்துரைப்போம் : ராகுல் காந்தி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:49:36 PM (IST)

தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:52:24 PM (IST)

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:56:11 AM (IST)





முட்டாள்Aug 28, 2025 - 09:18:38 PM | Posted IP 172.7*****