» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஐ.டி. ஊழியரை தாக்கிய விவகாரம்: லட்சுமி மேனனை கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 10:58:17 AM (IST)

கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் லட்சுமி மேனனை வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் ஒரு பாரில் லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனன் உடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன் மற்றும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மிதுன், அனீஷ் மற்றும் சோனமோல் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை லட்சுமி மேனனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்த வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பெச்சுகுரியன் தாமஸ், வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை லட்சுமி மேனனை கைது செய்ய கூடாது என நேற்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த மனு மீதான விசாரணை மீண்டும் அன்றைய தினம் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்மநாபசாமி கோவிலில் 107 கிராம் தங்கம் மாயம் : 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை...!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:24:57 AM (IST)

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : வந்தே பாரத் ரயில்களை துவக்கி பிரதமர் மோடி பேச்சு!
சனி 8, நவம்பர் 2025 12:29:52 PM (IST)

பணமதிப்பிழப்பு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அறிவிப்பு வந்ததா? மத்திய அரசு மறுப்பு
சனி 8, நவம்பர் 2025 8:49:34 AM (IST)
தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி என்பதை எடுத்துரைப்போம் : ராகுல் காந்தி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:49:36 PM (IST)

தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:52:24 PM (IST)

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:56:11 AM (IST)




