» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழகத்தில் பிஹாரிக்கள் கொல்லப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? - பிரசாந்த் கிஷோர் கேள்வி
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 3:47:00 PM (IST)
தமிழகத்தில் பிஹாரின் மைந்தர்கள் கொல்லப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில், பிஹாரிக்கள் மீதான அக்கறையில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி பிரசாந்த் கிஷோர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிஹார் வந்துள்ளார். இதே பிஹாரின் மைந்தர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்ட போது அவர் எங்கே சென்றிருந்தார்.? அவரின் இந்தத் தன்மை ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவிடமும் இருக்கிறது. அதேபோல் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், "பிஹாரிக்கள் அடிமை வேலை செய்யப் பழக்கப்பட்டவர்கள்.” என்று விமர்ச்சித்தவர்தானே?. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்மநாபசாமி கோவிலில் 107 கிராம் தங்கம் மாயம் : 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை...!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:24:57 AM (IST)

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : வந்தே பாரத் ரயில்களை துவக்கி பிரதமர் மோடி பேச்சு!
சனி 8, நவம்பர் 2025 12:29:52 PM (IST)

பணமதிப்பிழப்பு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அறிவிப்பு வந்ததா? மத்திய அரசு மறுப்பு
சனி 8, நவம்பர் 2025 8:49:34 AM (IST)
தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி என்பதை எடுத்துரைப்போம் : ராகுல் காந்தி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:49:36 PM (IST)

தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:52:24 PM (IST)

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:56:11 AM (IST)




