» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 11, செப்டம்பர் 2025 5:31:00 PM (IST)
வணிக ஆதாயத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் பெயர், படங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "தனது அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பல வலைத்தளங்கள் தனது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஏஐ-யால் உருவாக்கப்பட்ட அவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்படுவதாகவும், டி சர்ட், பாத்திரங்கள், ஜாரில் நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படம் பயன்படுத்துவதாகவும்,இதுதொடர்பாக இணையதளங்கள் அதிகளவில் பெருகி இருப்பதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து அத்தகைய அங்கீகாரம் இல்லாத போதிலும், அவரது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்யும் ஏராளமான வலைத்தளங்களை எடுத்துக்காட்டினார். இதனை பதிவு செய்து கொண்ட டெல்லி ஐகோர்ட்டு, பல்வேறு நோக்கங்களுக்காக நடிகையின் படங்களை அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தும் வலைத்தளங்களுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பிப்பதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், ஆன்லைன் தளங்கள் வணிக ஆதாயத்திற்காக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் பெயர், படங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிரபலமானவர்களின் ஒப்புதல் அவர்களின் பெயர், படங்களை இல்லாமல் பயன்படுத்தப்படும்போது, அது சம்பந்தப்பட்டவருக்கு வணிக ரீதியாக தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் பாதிக்கும் என்று டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது. ஐஸ்வர்யா ராய் பச்சன், பல நிறுவனங்களின் பிராண்ட் தூதராக பணியாற்றி வருவது குறிப்பிட்டத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி: தீபாவளி பரிசாக அமல்படுத்த மத்திய அரசு திட்டம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:02:06 PM (IST)

இந்தியாவின் 15-வது துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:52:07 AM (IST)

உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:44:57 AM (IST)

திருச்சி உட்பட 5 விமான நிலையங்களில் எப்டிஐ -டிடிபி திட்டம்: அமித் ஷா தொடங்கி வைத்தார்
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:42:37 AM (IST)

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம் உத்தரவு
வியாழன் 11, செப்டம்பர் 2025 4:58:30 PM (IST)

இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 81 சதவீதமாக உயர்வு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்!!
வியாழன் 11, செப்டம்பர் 2025 11:55:56 AM (IST)

இதுSep 12, 2025 - 07:09:20 AM | Posted IP 104.2*****