» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்
சனி 13, செப்டம்பர் 2025 12:06:12 PM (IST)
தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார். 
 
மணிப்பூர் பயணம் தொடர்பான பிரதமர் மோடியின் பதிவை மேற்கோள் காட்டி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. பிரதமர் இறுதியாக மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்பதை அவருக்கு நினைவூட்டுவதில் மனிதாபிமானம் தோற்றுவிட்டது. 2027 மணிப்பூர் தேர்தல் ஏற்பாடுகள் அதில் வெற்றி பெற்றுவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் நாளை, (செப்.13), மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூர் மற்றும் இம்பாலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். மணிப்பூரின் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு நாங்கள் முழுமையாக உறுதி பூண்டுள்ளோம்.
 மணிப்பூரில் பல்வேறு சாலைத் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், மகளிர் விடுதிகள் மற்றும் பலவற்றிற்கு அடிக்கல் நாட்டப்படும். மந்திரிபுக்ரியில் உள்ள சிவில் செயலகம், ஐடி சிறப்பு பொருளாதார மண்டலக் கட்டிடம் மற்றும் மந்திரிபுக்ரியில் உள்ள புதிய காவல் தலைமையகம் உள்ளிட்ட கட்டிடங்கள் திறக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.
 மக்கள் கருத்து
JAY JAY JAYSep 14, 2025 - 10:55:13 AM | Posted IP 172.7*****
குறை சொல்வதே உங்களுக்கு வேலை. தமிழ்நாட்டில் தேர்தல் வரப்போகிறது இப்போதுதான் மகளிர் உரிமை தொகை கொடுப்பதாகசொல்லுவது மட்டும் என்ன?????
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு: விரைவில் விசாரணை!
செவ்வாய் 4, நவம்பர் 2025 10:39:28 AM (IST)

தெரு நாய்கள் வழக்கில் நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 12:48:51 PM (IST)

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)

ஆந்திராவில் கோவில் ஏகாதசி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்
சனி 1, நவம்பர் 2025 3:24:37 PM (IST)

வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு : வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சனி 1, நவம்பர் 2025 11:09:11 AM (IST)

உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ் : தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் பேச்சு!
சனி 1, நவம்பர் 2025 8:43:01 AM (IST)





ஓ அப்படியாSep 15, 2025 - 07:06:37 PM | Posted IP 162.1*****