» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !

திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக்கோண்டே இருக்காதீர்கள் என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 

தமிழகத்தில் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கும் தொகுப்பு ஊழியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய உரிய பணம் கிடைக்காததால் ஒப்பந்த செவிலியர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக்கோண்டே இருக்காதீர்கள் என்று தெரிவித்தது. ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட்டு, அதை எக்காரணம் கொண்டும் தட்டிக்கழிக்க முடியாது என தெரிவித்தது.

மேலும், இலவசங்களுக்கு கொடுக்க பணம் இருக்கிறது ஆனால் பணி செய்வர்களுக்கு தர பணம் இல்லையா? என்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, இந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய அரசு, செவிலியர் சங்கம் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.


மக்கள் கருத்து

SivaSriSep 15, 2025 - 06:27:17 PM | Posted IP 162.1*****

நீதிமன்றம் சரியான பதில் அளிதாதுள்ளது . இலவசம் என்று கூறி கொடுக்கிறீர்கள் அது எல்லோரையும் சென்றடைவது இல்லை.அதிகமான இளம்பெண்கள் BSC nursing diploma nursing முடித்து விட்டு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.எந்த வேலை வாய்ப்புகள் இல்லை.படித்த பட்டதாரிகளுக்கு உதவியும் இல்லை.வீட்டில் தந்தை தாய் இல்லாமல் படித்துவிட்டு வழி இல்லாமல் திருமணமும் ஆகாமல் இருக்கிறார்கள்.வருடத்திற்க்கு ஒவ்வொரு மாவட்ட ரீதியாக வேலை PHக்கு எடுக்கலாம்.வாழ்வாதாரம் இல்லாமல் வாடகை வீடு அப்போ படிப்பு எதற்கு கவுன்சிலிங் போனால் நல்ல மதிப்பெண் பெற்ற பிள்ளைக்கு தனியார் கல்லூரி.பணம் உள்ளவர்களுக்கு அரசு கல்லூரி.பணிநிமித்தமாக இணை இயக்குநர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு தேவை.அதற்கு மனு கொடுத்தால் வேலைக்கு ஆள் எடுத்தாச்சு எல்லாம் Recomend அப்போ கடன் வாங்கி படித்து இளம் வயதினர் என்ன செய்வார்கள்.எல்லாம் லஞ்சம் ஊழல் எதுவும் வெளிப்படை இல்லை.நன்றி .தனியாரின் வேலை அதிகம் ஊதியம் குறைவு.அங்கேயும் வேலைச்ரண்டல்.அரசு ஒப்பந்த அடிப்படையில் வைத்து பலி வாங்குது வாழத்தெரியவில்லை என்று கண்ணீரீல் இளம்பெண்களின் பதில் நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory