» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)
ஆதார் திருத்தம் தொடர்பான கட்டணங்கள் அக்.1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது என்று UIDAI அறிவித்துள்ளது.
 இந்தியர்களின் முக்கிய அடையாள அட்டையாக இருக்கும் ஆதார் கார்டு (UIDAI வழங்குவது) வங்கி, அரசு திட்டங்கள், பயணம், டிஜிட்டல் சரிபார்ப்பு என பல இடங்களில் அவசியமாகிறது. அதனால், குறிப்பாக பிறந்த தேதி (DOB) உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருப்பது மிக முக்கியம். தற்போது, UIDAI பிறந்த தேதியை திருத்தும் செயல்முறையை எளிமைப்படுத்தியுள்ள நிலையில், அதை ஆன்லைனில் செய்ய முடியாது. நேரடியாக சென்டரில்தான் செய்ய வேண்டும்.
 இந்த நிலையில், ஆதார் திருத்தம் தொடர்பான கட்டணங்கள் அக்.1 ஆம் தேதி முதல், உயர்த்தப்படுகிறது. ஆதாரில் பயோமெட்ரிக் தகவல் புதுப்பிக்கும் கட்டணம் ரூ,100-ல் இருந்து ரூ.125 ஆக உயர்வதாக UIDAI அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு, 7 முதல் 15 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பிற புதுப்பிப்புகளுக்கான கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக உயரும் என்றும் myAadhaar போர்டல் வாயிலாக ஆவணங்களைப் புதுப்பிப்பது ஜூன் 14, 2026 வரை இலவசமாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு: விரைவில் விசாரணை!
செவ்வாய் 4, நவம்பர் 2025 10:39:28 AM (IST)

தெரு நாய்கள் வழக்கில் நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 12:48:51 PM (IST)

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)

ஆந்திராவில் கோவில் ஏகாதசி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்
சனி 1, நவம்பர் 2025 3:24:37 PM (IST)

வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு : வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சனி 1, நவம்பர் 2025 11:09:11 AM (IST)

உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ் : தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் பேச்சு!
சனி 1, நவம்பர் 2025 8:43:01 AM (IST)




