» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
புதன் 19, நவம்பர் 2025 5:27:31 PM (IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி அவருடைய வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்தனர்.
அதில் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி நாகேந்திரன் உடல்நல பிரச்சனையால் காலமானார். மேலும் இருவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதால் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதால் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வாதம் முன்வைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும், ஒவ்வொரு வழக்கிலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக் கோருவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:56:38 PM (IST)

சாகர் தீவை இணைக்க ரூ.1,670 கோடி செலவில் பாலம்: மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:51:15 AM (IST)

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை
திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)

பெண்களின் ஆபாச ஏஐ வீடியோ, படங்களை நீக்க வேண்டும்: எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கெடு!
சனி 3, ஜனவரி 2026 3:37:12 PM (IST)

இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனை வேலுநாச்சியார்: பிரதமர் மோடி புகழாரம்!
சனி 3, ஜனவரி 2026 11:06:20 AM (IST)

மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த விவகாரம்: உயிரிழப்பு 11 ஆக உயர்வு!
வெள்ளி 2, ஜனவரி 2026 5:05:35 PM (IST)

