» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்!
வியாழன் 20, நவம்பர் 2025 10:32:13 AM (IST)
தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 272 முக்கிய பிரமுகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
நீதித் துறையின் செயல்பாட்டையும் சந்தேகிக்கின்றனர். நாடாளுமன்றத்தையும் அதன் அதிகாரிகளையும் குறை கூறுகின்றனர். இப்போது அதேமுறையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நேர்மை கண்ணியத்தின் மீது குறை கூறுகிறார்கள்.
குறிப்பாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வாக்குகளை திருடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். தேர்தல் ஆணையத்துக்கு எதிராக 100% ஆதாரம் இருக்கிறது என்றும் ஹைட்ரஜன் குண்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அதற்கு உரிய ஆதாரங்களை அவர் வழங்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள், பிற எதிர்க்கட்சித் தலைவர்கள், சில தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவையும் இதே மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் நடைமுறையை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் நீதிமன்ற உத்தரவின்படி இந்த பணி நடைபெறுவது தெரிகிறது. தகுதியற்ற பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தகுதியுடைய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தேர்தலில் தோல்வி அடையும் அரசியல் கட்சிகள் விரக்தியடைந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. தேர்தல் ஆணையம் தனது வெளிப்படைத் தன்மையை தொடர வேண்டும். அதேநேரம், அரசியல் சாசன அமைப்புகளின் செயல்முறையை அரசியல் கட்சித் தலைவர்கள் மதிக்க வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. ஜனநாயக தீர்ப்பை ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
புதன் 19, நவம்பர் 2025 5:27:31 PM (IST)

பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை எதிரொலி : டிஜிட்டல் தங்கம் விற்பனை கிடுகிடு சரிவு!
புதன் 19, நவம்பர் 2025 8:37:56 AM (IST)

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை எதிரொலி : இருமல் மருந்து வாங்க புதிய கட்டுப்பாடு!
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:52:54 PM (IST)

பாஜகவினருக்கு ஆயுதங்கள் அளிப்பதை ஆளுநர் நிறுத்த வேண்டும்: திரிணமூல் எம்பி சர்ச்சை பேச்சு..!
திங்கள் 17, நவம்பர் 2025 11:13:22 AM (IST)

சபரிமலை கோவில் நடை மண்டல பூஜைக்காக திறப்பு : தினமும் 90 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!
திங்கள் 17, நவம்பர் 2025 8:50:45 AM (IST)

அதானி ஒப்பந்தத்தில் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவில் இருந்து நீக்கம்!
சனி 15, நவம்பர் 2025 5:34:20 PM (IST)




