» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மும்பை குறித்து சர்ச்சை பேச்சு: அண்ணாமலைக்கு உத்தவ் சிவசேனா கண்டனம்!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:36:55 PM (IST)

மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் மும்பை மராட்டியத்தின் நகரம் அல்ல என்று அண்ணாமலை பேசியதாக கூறி உத்தவ் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மும்பை மாநகராட்சிக்கு வருகிற 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் மும்பையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "மத்தியில் நரேந்திர மோடி, மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் இருக்கிறார்கள். இந்த வேளையில் மும்பை மாநகராட்சியில் ஒரு பாஜக மேயர் இருக்க வேண்டும். ஏனென்றால் மும்பை என்பது மராட்டியத்தின் நகரம் அல்ல, இது ஒரு சர்வதேச நகரம்” என்றார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு உத்தவ் சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மராட்டிய தலைநகரம் குறித்து இப்படி பேச பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளரான அண்ணாமலைக்கு எப்படி துணிச்சல் வந்தது?. இதுதான் பா.ஜனதாவின் அதிகாரப்பூர்வ நிலைபாடா? அண்ணாமலை மீது உடனடியாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யவேண்டும். அவரை மும்பையை விட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது. துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் சுயமரியாதை எங்கே போனது? எவ்வளவு காலம் இப்படி அடிபணிந்து இருப்பீர்கள்?” என்றார்.
இந்த விவகாரம் குறித்து பதிலளித்து பேசிய பாஜக மூத்த தலைவரும், அமைச்சருமாக சந்திரசேகர் பவன்குலே, "பொதுவாக ஒரு மேடையில் பேசும்போது சில கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் அல்லது திரித்து கூறப்படலாம். மும்பையை ஒரு ‘சர்வதேச நகரம்' என்று அவர் குறிப்பிட்டதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை நாம் முதலில் ஆராய வேண்டும். அதை விடுத்து உடனே தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனநாயகன் பட விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு!
சனி 10, ஜனவரி 2026 4:06:56 PM (IST)

பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் விவகாரம்: பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்!
சனி 10, ஜனவரி 2026 11:47:16 AM (IST)

நாடாளுமன்றம் ஜன.28ஆம் தேதி கூடுகிறது: பிப்.1-ல் பட்ஜெட் தாக்கல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 5:26:52 PM (IST)

சிவசேனா கட்சியை பிரதமர் மோடி உடைத்தார் : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
வெள்ளி 9, ஜனவரி 2026 4:59:21 PM (IST)

ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா பானர்ஜி கடும் கண்டனம்
வியாழன் 8, ஜனவரி 2026 4:38:10 PM (IST)

பனிச்சறுக்கு விபத்து: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மகன் மரணம்!
வியாழன் 8, ஜனவரி 2026 10:19:38 AM (IST)

