» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கோவையில் ஏழுமலையான் கோயில் பணிகள் விரைவில் துவங்கும் : தேவஸ்தான அதிகாரி தகவல்
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:29:04 PM (IST)
கோயம்புத்தூரில் ஏழுமலையான் கோயில் கட்ட தமிழக அரசு நிலம் ஒதுக்கி உள்ளது. இங்கு மிக விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் நேற்று நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் தலைமையில் உயர்மட்ட தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் அனில்குமார் சிங்கால் பேசியதாவது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனையின்படி, நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில் கட்டப்படுகிறது.
தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஏழுமலையான் கோயில் கட்ட தமிழக அரசு நிலம் ஒதுக்கி உள்ளது. இங்கு மிக விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். இதேபோன்று, அசாம் மாநிலம் குவாஹாட்டி, பிஹாரில் பாட்னா, கர்நாடக மாநிலம் பெல்காம் உள்ளிட்ட பகுதிகளிலும் அந்தந்த மாநில அரசுகள் நிலம் ஒதுக்கி உள்ளன.
சென்னையில் கட்டப்படும் ஏழுமலையான் கோயிலுக்கு தேவையான வரைபட ஒப்புதல், கோயில் நிர்வாக ஒப்புதல் போன்ற அனுமதிகளை சம்பந்தப்பட்ட அரசுகளிடமிருந்து பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இதர கோயில்களில் அன்னபிரசாதம் விநியோகத்தில் மாற்றம் செய்யப்படும்.
சென்னையில் கட்டப்படும் ஏழுமலையான் கோயிலுக்கு தேவையான வரைபட ஒப்புதல், கோயில் நிர்வாக ஒப்புதல் போன்ற அனுமதிகளை சம்பந்தப்பட்ட அரசுகளிடமிருந்து பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இதர கோயில்களில் அன்னபிரசாதம் விநியோகத்தில் மாற்றம் செய்யப்படும்.
தற்போது ஏழுமலையான் கோயில் தவிர மீதமுள்ள 56 கோயில்களில் ஒருவேளை மட்டும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இனி, வரும் மார்ச் மாதம் முதல் 60 தேவஸ்தான கோயில்களில் மதியம் மற்றும் இரவு என இரு வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இவ்வாறு அனில்குமார் சிங்கால் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:31:57 PM (IST)

பணி நேரத்தில் பெண்களுடன்... ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்ட்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 11:49:20 AM (IST)

பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ பரவல் - உயிரை மாய்த்த நபர்!
திங்கள் 19, ஜனவரி 2026 3:30:50 PM (IST)

கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் தொடர்ந்து பிரசாரம் செய்தது ஏன்? விஜய்யிடம் சிபிஐ கேள்வி
திங்கள் 19, ஜனவரி 2026 12:54:46 PM (IST)

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழக நிர்வாகிகளுக்கு ராகுல் அறிவுறுத்தல்
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:36:39 AM (IST)

நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
சனி 17, ஜனவரி 2026 5:00:23 PM (IST)

