» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விமான விபத்து: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு!
புதன் 28, ஜனவரி 2026 10:24:59 AM (IST)
விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற சிறிய ரக விமானம் இன்று காலை 8.45 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறால் பாராமதி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கிய போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இந்தவிமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் இருந்த 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் முக்கிய முகம்
மகாராஷ்டிராவின் தேவ்லாலி எனும் சிறிய ஊரில் 1959ஆம் ஆண்டு பிறந்த அஜித் பவார், 1982ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். 1991ஆம் ஆண்டு பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக வென்ற அஜித் பவார், அதனை தனது சித்தப்பா சரத் பவாருக்காக விட்டுக்கொடுத்தார்.
அதே ஆண்டு பாராமதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிக் கண்ட அஜித் பவார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாராமதி தொகுதியின் எம்.எல்.ஏவாகவும், மகாராஷ்டிரா அரசியலின் முக்கிய முகமாகவும் இருந்து வருகிறார். 1991ஆம் ஆண்டு வேளாண் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்ற அஜித் பவாரின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்த அவர், ஒரு கட்டத்தில் சரத் பவாரின் அரசியல் வாரிசாக கருதப்பட்டார். பின்னர் சரத் பவாருடன் ஏற்பட்ட மோதலால் தனித்து செயல்பட்ட அவர், பின்னர் தேசியவாத கட்சியையும் அதன் சின்னத்தையும் தனதாக்கினார்.
மகாராஷ்டிரா வரலாற்றில் துணை முதலமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்த ஒரே நபர் அஜித் பவார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, அமித்ஷா உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தட்டுப்பாட்டைப் போக்க இந்தியாவிற்கு வருகிறது 93,000 டன் எரிவாயு: மத்திய அரசு நடவடிக்கை!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:20:20 AM (IST)

குதிரை பேர அச்சம்: 8 எம்எல்ஏ-க்களை கர்நாடகாவுக்கு மாற்றியது ஒடிசா காங்கிரஸ்!
சனி 14, மார்ச் 2026 12:50:01 PM (IST)

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்: மாநிலங்களவையில் குரல் எழுப்பிய அ.தி.மு.க.!
சனி 14, மார்ச் 2026 8:51:29 AM (IST)

மாதவிடாய் கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 13, மார்ச் 2026 5:00:23 PM (IST)

தமிழக டிஜிபி நியமனம்: மார்ச் 20-ல் ஆலோசனைக் கூட்டம் - யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 13, மார்ச் 2026 12:23:23 PM (IST)

ஜம்முவில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு முயற்சி - முதியவர் கைது!
வெள்ளி 13, மார்ச் 2026 8:49:29 AM (IST)

