» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாதவிடாய் கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 13, மார்ச் 2026 5:00:23 PM (IST)
பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இத்தகைய சட்டம் பெண்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என்று நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்த முக்கியக் கருத்துகள்: மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பைக் கட்டாயமாக்கினால், தனியார் நிறுவன உரிமையாளர்கள் பெண்களை வேலைக்கு அமர்த்துவதைத் தவிர்க்கக்கூடும். இது பெண்களின் தொழில்முறை வாய்ப்புகளைப் பறிப்பதோடு, அவர்களைப் பின்னுக்குத் தள்ளும்.
இத்தகைய சட்டம், ஆண்களை விடப் பெண்கள் உடல் ரீதியாகத் தாழ்வானவர்கள் என்ற தவறான பிம்பத்தை உருவாக்கக்கூடும். இது பெண்களிடையே உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியலமைப்பு ரீதியாகப் பெண்களுக்கு உரிமைகள் இருந்தாலும், நடைமுறைச் சந்தை நிலவரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து விடுப்பு அளிப்பது வரவேற்கத்தக்கது, ஆனால் அதைச் சட்டமாக்கினால் பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு குறையும்.
இதுவரை இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிப்படைந்த எந்தப் பெண்ணும் நீதிமன்றத்தை அணுகவில்லை" என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது கொள்கை சார்ந்த முடிவு என்பதால் மத்திய அரசே இதில் முடிவெடுக்கலாம் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:20:52 PM (IST)

பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவை: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:19:11 AM (IST)

கல்பாக்கம் அணு உலை சாதனை - இந்தியாவிற்குப் பெருமை: பிரதமர் மோடி புகழாரம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:17:30 AM (IST)

டி.வி. பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்திக்கு கத்திக்குத்து: மும்பை முதியவரின் வெறிச்செயல்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:11:48 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பெட்டிகளில் பயணிக்க அனுமதி: யு.டி.ஐ.டி அட்டை இருந்தால் போதும்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 10:20:33 AM (IST)

அக்சய் குமார் மகளுக்கு ஆன்லைன் கேமில் பாலியல் தொல்லை: மர்ம ஆசாமி கைது!
சனி 25, ஏப்ரல் 2026 5:35:24 PM (IST)


