» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி ரூ.2.5 கோடி பறிப்பு : பெண் டிஎஸ்பி சஸ்பெண்ட்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 5:33:44 PM (IST)

சட்டீஸ்கர் மாநிலத்தில் தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறித்த பெண் காவல் அதிகாரி அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் டாண்டனுக்கும், பெண் டிஎஸ்பி கல்பனா வர்மாவின் தந்தைக்கும் இடையே காசோலை தொடர்பான பணத் தகராறு ஏற்கனவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் அந்தத் தொழிலதிபரைத் தனது காதல் வலையில் வீழ்த்திய கல்பனா வர்மா, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை மிரட்டிப் பணம் பறித்ததாகப் புகார் எழுந்தது.
தண்டேவாடா மாவட்டத்தில் பணியாற்றி வந்த கல்பனா வர்மாவை நேற்று சட்டீஸ்கர் அரசு அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அவர் தொழிலதிபரிடம் இருந்து 2 கோடி ரூபாய் ரொக்கம், ஒரு சொகுசு கார், 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம் மற்றும் தங்க நகைகள் என மொத்தம் 2.5 கோடி ரூபாய்க்கு மேல் மிரட்டிப் பறித்ததாகப் புள்ளி விபரங்களுடன் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
மேலும், காவல்துறையின் ரகசியத் தகவல்களைத் தனது செல்போன் மூலம் தொழிலதிபருக்குக் கசியவிட்டுப் பாதுகாப்பு விதிகளை மீறியதும், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில குடிமைப்பணி விதிகளை மீறிய காரணத்தால் அவர் தலைமையகத்தை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 1,475 பக்கங்கள் கொண்ட விரிவான விசாரணை அறிக்கையில் அவர் மீதான பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்யாவிலிருந்து 7 கச்சா எண்ணெய் கப்பல்கள், அமெரிக்காவிலிருந்து சமையல் எரிவாயு வருகை!
திங்கள் 23, மார்ச் 2026 12:49:55 PM (IST)

இந்திய அரசியலில் நீண்ட காலம் அரசுத் தலைவராகப் பதவி வகித்து பிரதமர் மோடி புதிய சாதனை!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:19:54 PM (IST)

பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கு: பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சனி 21, மார்ச் 2026 4:52:35 PM (IST)

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!
சனி 21, மார்ச் 2026 4:12:29 PM (IST)

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 12:30:14 PM (IST)

ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம்: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சனி 21, மார்ச் 2026 11:53:47 AM (IST)

