» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரஷ்யாவிலிருந்து 7 கச்சா எண்ணெய் கப்பல்கள், அமெரிக்காவிலிருந்து சமையல் எரிவாயு வருகை!
திங்கள் 23, மார்ச் 2026 12:49:55 PM (IST)

சர்வதேசப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தித் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அமெரிக்காவிலிருந்து 47,000 டன் சமையல் எரிவாயு மங்களூரு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அதேபோல், ரஷ்யாவிலிருந்து 7 கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியாவை நோக்கித் திருப்பி விடப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைச் சமாளிக்க, அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து 22 லட்சம் டன் எல்.பி.ஜி-யைக் கொள்முதல் செய்ய இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து 'பைக்ஸிஸ் பயோனீர்' என்ற கப்பல் 47,000 டன் சமையல் எரிவாயுவுடன் நேற்று மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது.
சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த ரஷ்யாவின் 7 கச்சா எண்ணெய் கப்பல்கள் தற்போது இந்தியாவிற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. இதில் 'அகுவா டைட்டன்' (Aqua Titan) என்ற கப்பல் சுமார் ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் நேற்று முன்தினம் மங்களூரு துறைமுகத்திற்கு வந்தது. மீதமுள்ள 6 ரஷ்யக் கப்பல்களும் அடுத்தடுத்து இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, ஈரான் ராணுவத்தின் சிறப்பு அனுமதியுடன் ஷிவாலிக், நந்தா தேவி, ஜக் லட்கி ஆகிய கப்பல்கள் ஏற்கனவே கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மங்களூரு துறைமுகத்தில் உள்ள பிரம்மாண்ட சேமிப்புக் கிடங்குகளிலிருந்து கர்நாடகா, தமிழகம், தெலங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. அடுத்தடுத்து கப்பல்கள் வருவதால், தென் மாநிலங்களில் நிலவும் எல்.பி.ஜி தட்டுப்பாடு விரைவில் சீராகும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இக்கட்டான சூழலில் தோழமை சக்திகளைக் கைவிட மாட்டோம்: அகிலேஷ் யாதவ் பகிரங்க ஆதரவு!
வெள்ளி 8, மே 2026 4:18:25 PM (IST)

பெண் எம்.எல்.ஏ.-விடம் தவறாக நடக்க முயன்ற காங்கிரஸ் பிரமுகர்: கேரள அரசியலில் பரபரப்பு
வெள்ளி 8, மே 2026 8:47:41 AM (IST)

பதவி விலக மறுத்த மமதா: சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
வியாழன் 7, மே 2026 9:00:04 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: வீரர்களை தேசம் வணங்குகிறது - ராஜ்நாத் சிங் பெருமிதம்!
வியாழன் 7, மே 2026 4:48:02 PM (IST)

வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து: அவமதித்தால் 3 ஆண்டு சிறை!
வியாழன் 7, மே 2026 11:56:11 AM (IST)

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட மத்திய அரசு மீண்டும் கெடு: புதிய அரசுக்கு காத்திருக்கும் முதல் சவால்!
வியாழன் 7, மே 2026 10:22:12 AM (IST)



ஆமாMar 23, 2026 - 01:47:54 PM | Posted IP 162.1*****